தூக்கிட்டால் மரணம் ஏற்படுமா?.. சோதனை செய்த 11 வயது சிறுவன் பரிதாப பலி.!

தூக்கிட்டால் மரணம் ஏற்படுமா?.. சோதனை செய்த 11 வயது சிறுவன் பரிதாப பலி.!



Uttar pradesh Hamirpur Minor Boy Died 

 

சமூக வலைத்தளத்தில் பார்ப்பது எல்லாம் உண்மை இல்லை என்பதை, குழந்தைகளுக்கு பெற்றோர் புரிய வைக்க வேண்டும்.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹமிர்பூர் மாவட்டத்தை சேர்ந்த 11 வயது சிறுவன், தூக்கிடுவது போல ரீல்ஸ் வீடியோ பார்த்து, அதனை முயற்சித்தபோது பரிதாபமாக உயிரிழந்தார். 

ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள ரபீந்திரநாத் தாகூர் நகரில் வசித்து வரும் சிறுவன், அங்குள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த சிறுவன், சம்பவத்தன்று செல்போனில் வீடியோ பார்த்துள்ளார். 

அப்போது, தூக்கிடுவதுபோல வீடியோ பார்த்த சிறுவன், தானும் அதனை செய்து பார்க்க நினைத்து தாயின் துப்பட்டாவை பயன்படுத்தி தொங்கி இருக்கிறார். இதனால் சிறுவனின் கழுத்து துப்பட்டாவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

தாய் தனது வீட்டின் அறைக்குள் நுழைந்தபோது மகன் தூக்கில் பிணமாக தொங்குவதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். பின் மகனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது, மருத்துவர் சிறுவனை பரிசோதனை செய்துவிட்டு உயிரிழப்பை உறுதி செய்தனர். 

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சிறுவன் வீடியோ பார்த்து, அதனை செய்ய முயற்சித்து உயிரிழந்தது தெரியவந்தது. சிறுவனுக்கு உடன்பிறந்த சகோதரர்களாக இருவரும், ஒரு சகோதரியும் இருக்கின்றனர். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீக்ஷயா சர்மா, சமீபத்தில் இளைஞர்கள் தூக்கிடுவது போலவும், அதனால் ஒன்றும் ஆகவில்லை என்பது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது. அதனைப்பார்த்து சிறுவனும் முயற்சித்து உயிரை இழந்துள்ளார் என தெரிவித்தார்.