கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் அடித்துக்கொலை; கணவர், மாமனார் கைது.!

கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் அடித்துக்கொலை; கணவர், மாமனார் கைது.!


Uttar Pradesh Greator Noida Girl Killed by Husband 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்தவர் விகாஷ். இவரின் மனைவி கரிஷிமா. தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் விகாஸுக்கு ரூ.21 இலட்சம் ரோகம், எஸ்யுவி ரக கார் வரதட்சணையாக வழங்கப்பட்டுள்ளது. பணத்தை பெற்றுக்கொண்ட விகாஷ் மற்றும் அவரின் குடும்பத்தினர், தொடர்ந்து கூடுதல் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். 

புதிதாக தனக்கு டொயாட்டோ பர்ஸுனர் கார் ஒன்றை வாங்கித்தர வேண்டும், கூடுதல் பணம் வேண்டும் என கரிஷிமாவை தொந்தரவு செய்து வந்துள்ளனர். கடந்த 2022 டிசம்பரில் முடிந்த திருமணம், தற்போது வரை வரதட்சணை கொடுமையால் துயரமாக இருந்துள்ளது. 

இந்நிலையில், சம்பவத்தன்று விகாஷ் மற்றும் அவரின் குடும்பத்தினர் சேர்ந்து கரிஷிமாவை அடித்து கொலை செய்துள்ளனர். வரதட்சணைக்காக நடந்த கொலை சம்பவம் குறித்து காவல் துறையினரிடம் பெண் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. 

புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விகாஷ் மற்றும் அவரது தந்தை சோம்பல் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர்.