ஒரே நேரத்தில் 2 சிறுமிகளை மிரட்டி பலாத்காரம் செய்த இளைஞர்!,.. வாழ்நாள் சிறையில் தள்ளிய நீதிமன்றம்..!

ஒரே நேரத்தில் 2 சிறுமிகளை மிரட்டி பலாத்காரம் செய்த இளைஞர்!,.. வாழ்நாள் சிறையில் தள்ளிய நீதிமன்றம்..!


two-girls-were-raped-several-times-by-single-man

மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டு சிறுமிகளை மிரட்டி இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  இதற்கு அந்த சிறுமிகளின் தாய் உடந்தையாக இருந்த அவலம் அரங்கேறியிருக்கிறது.  

மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்கர் மாவட்டத்தை சேர்ந்த 35 வயது இளைஞர் ஒருவர் அதே பகுதியில் உள்ள இரண்டு சகோதரிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார் . 

இதற்கு அந்த சிறுமிகளின் தாய் உடந்தையாக இருந்த்தாக கூறப்படுகிறது.   பெற்ற தாயே இந்தக் கொடுமைக்கு உடந்தையாக இருந்ததால் அந்த சிறுமிகள் எதுவும் செய்ய முடியாமல் கண்ணீர் விட்டிருக்கிறார்கள். யாரிடமும் இதைப்பற்றி சொல்ல முடியாமலும் தவித்து வந்திருக்கிறார்கள்.

இதை இப்படியே விட்டுவிட்டால் தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு ஆளாக வேண்டியது வரும் என்று நினைத்த சகோதரிகளில் ஒருவர் துணிந்து சென்று ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியை நாடியிருக்கிறார். தொண்டு நிறுவனம் அந்த சிறுமியிடம் விவரங்களை கேட்ட பின்னர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

சிறுமி அளித்த புகாரையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரையும்,  பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த அந்த சிறுமிகளின் தாயையும் கைது செய்துள்ளனர்.  இருவர் மீதும் வழக்கு வழக்குப்பதிவு செய்து பால்கர் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர் .

விசாரணைகள் முடிந்து இளைஞர்  மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சாகும் வரையில் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.  மேலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்திருக்கிறார். பாலியல்  வன்கொடுமையில் சிறுமிகளின் தாய் உடந்தையாக இருந்ததாக வழக்கில் சேர்க்கப்பட்டாலும் விசாரணையில் அதற்கான ஆதாரம் எதுவும் இல்லாததால் நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருக்கிறது.