கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
முக்கோண காதல்.. முதல் காதலனுக்கு கதலியால் நேர்ந்த கொடூரம்!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த கார் டீலர் சந்திப் குமார். இவருக்கும் கொல்கத்தா விமான நிலையத்தில் அமைந்துள்ள உணவகத்தில் வேலை செய்யும் அஞ்சலி ஷா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.
இதனிடையே அஞ்சலி ஷா, பிகாஷ் குமார் ஷா என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த முக்கோண காதல் விவகாரம் பிகாஷ் குமாருக்கு தெரிய வந்ததால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அஞ்சலி ஷாவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே அஞ்சலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து சந்தீப் குமார் மிரட்டியுள்ளார். இதனையடுத்து அஞ்சலியும், பிகாஷ் குமாரும் இருவரும் சேர்ந்து சந்தீப் குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர்.
அதன்படி அசாம் மாநிலம் கௌஹாத்தி விமான நிலையம் அருகே உள்ள தனியார் விடுதிக்கு சந்தீப் குமாரை வரவைத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்த ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை செய்த காதல் ஜோடியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கொல்கத்தா விமான நிலையம் சென்ற அஞ்சலிக்ஷா மற்றும் பிகாஷ் குமார் இருவரையும் கைது செய்தனர்.