வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
நீண்ட நாட்களுக்கு பிறகு தொடங்க உள்ள ரயில்சேவை! துவங்கியது முன்பதிவு!
ஏப்.14-ஆம் தேதிக்குப் பிறகு, ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டமில்லை என மத்திய அரசு அறிவித்ததையடுத்து இந்திய ரயில்வே, வரும் 15-ஆம் தேதி முதல் ரயில் பயணச்சீட்டுக்கான முன்பதிவைத் தொடங்க முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக பிரதமா் மோடி, 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டாா். இதனால் ரயில், போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் ஏப்.14-ஆம் தேதிக்குப் பிறகு, ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டமில்லை என மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது. இதனையடுத்து இந்திய ரயில்வே, வரும் 15-ஆம் தேதி முதல் ரயில் பயணச்சீட்டுக்கான முன்பதிவைத் தொடங்க முடிவு செய்துள்ளது.
வரும் 15-ஆம் தேதிக்குப் பிறகு ரயில் பயணத்துக்கு ஐஆா்சிடிசி செயலி மூலம் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் கவுன்ட்டா்களில் ஏப்.15ஆம் தேதி காலை முதல் முன்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்றும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அதற்கேற்ப திட்டம் மாற்றியமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.