இந்தியா லைப் ஸ்டைல்

பசுமாட்டில் பால்கறக்கும் ட்ராக்டர்..! யாரும் பார்த்திராத சம்பவம்.! வைரல் வீடியோ காட்சி..!

டிராக்டரை பயன்படுத்தி சிலர் மாட்டில் இருந்து பால்கறக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது சில சுவாரசியமான வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது மிகவும் விசித்திரமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சுமார் 1 நிமிடம் 12 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் சிலர் ட்ராக்டர் மூலம் பைப்புகளை இணைத்து அதனைக்கொண்டு பசுமாட்டிடம் இருந்து பால் கறக்கின்றனர். "எங்கள் டிராக்டர்கள் கிராமப்புறங்களில் 'மல்டி டாஸ்கிங்'  செய்யும் இயந்திரமாக எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கான கிளிப்களை மக்கள் எனக்கு அனுப்புகிறார்கள். இது எனக்கு ஒரு புதுமையான வீடியோ" என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை 3  அதிகமானோர் அந்த வீடியோ காட்சியினை பார்த்து ரசித்துள்ளனர். இதோ அந்த வீடியோ. 


Advertisement