அய்யோ.. பார்க்கவே பதறுது! குழந்தைக்கு செருப்பு போட்ட தாய்! கண்ணிமைக்கும் நொடியில் ஜன்னலில் இருந்து கீழே விழுந்து! 12வது மாடியில் இருந்து....பகீர் வீடியோ!



toddler-tragic-fall-nalasopara-apartment

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம் நாலசோபரா கிழக்கில் உள்ள ஒரு உயரமான குடியிருப்பில் ஒரு 3 வயது சிறுமி, 12வது மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த துயர சம்பவம் தற்போது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து ஜூலை 22ஆம் தேதி இரவு 8.20 மணியளவில் நடந்துள்ளது. சிறுமி, ஒரு எலக்ட்ரீஷியனின் மகளாவார் என்றும், சம்பவ நேரத்தில் பெற்றோர்களுடன் உறவினர் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

வீட்டிலிருந்து கிளம்பும் போது தாயார் சிறுமிக்கு காலணிகள் அணிவிக்க முயன்றபோது, அவளை காலணி பெட்டியில் நிற்க வைத்துள்ளார். ஆனால் அந்த பெட்டியின் பின்புறம் திறந்திருந்ததால், சிறுமி சமநிலையை இழந்து நேராக 12வது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார்.

இதையும் படிங்க: கர்ப்பிணி மனைவியை கொன்று 2 நாட்கள் சடலத்துடன் வசித்த கணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், வழியிலேயே உயிரிழந்தார் என மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இந்தச் சம்பவம் குறித்து நைகான் போலீசார், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 174ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது ஒரு விபத்துச் சம்பவம் என்றும், யாரையும் குற்றவாளியாக கருதவில்லை என்றும் சிறுமியின் தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த துயரமான நிகழ்வு, உயர கட்டிடங்களில் சிறுவர் பாதுகாப்பு குறித்து சிந்திக்க வைக்கும் முக்கியமான நினைவூட்டலாக உள்ளது.

இதையும் படிங்க: இரண்டு தலைகளுடன் பிறந்த பெண் குழந்தை! இரு இதயங்கள் இருந்தும், ஒன்று மட்டுமே! உறவினர்கள் மற்றும் மருத்துவர்கள் அதிர்ச்சி! குழந்தை தீவிர சிகிச்சையில் அனுமதி!