திருப்பதி டீ கப்பில் சிலுவை?.. சர்ச்சைக்குரிய டீக்கடைக்கு சீல் வைத்த தேவஸ்தான அதிகாரிகள்.!tirupati-ttd-seized-tea-shop

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக புகழ்பெற்ற திருத்தலம் ஆகும். இந்த திருத்தலத்தில் திருப்பதி தேவஸ்தான டீக்கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். 

அப்போது, திருமலை பகுதியில் அமைந்துள்ள டீக்கடையில் விநியோகம் செய்யப்பட்ட டீ கப்பில் Tea என்ற ஆங்கில வார்த்தையில், TEA என்ற எழுத்து வித்தியாசமாக எழுதப்பட்டது. 

அதில் T பார்க்க சிலுவை போல இருந்ததாக கூறி, பிற மத அடையாளத்தை திருமலையில் உபயோகம் செய்த காரணத்தால் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். திருமலையில் பிறமத அடையாளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.