ஆள விடுங்கடா சாமி..! சீனாவில் இருந்து பிரபலமான நாட்டுக்கு மாறுகிறது டிக் டாக் நிறுவனம்.? எங்கு தெரியுமா.? - TamilSpark
TamilSpark Logo
இந்தியா டெக்னாலஜி

ஆள விடுங்கடா சாமி..! சீனாவில் இருந்து பிரபலமான நாட்டுக்கு மாறுகிறது டிக் டாக் நிறுவனம்.? எங்கு தெரியுமா.?

கடந்த மாதம் இந்திய அரசு டிக் டாக் செயலி உட்பட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடைவிதித்தது. நாட்டின் இறையாண்மை மற்றும் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் திருட்டு குறித்து இந்திய அரசு இந்த அதிரடி முடிவை  மேற்கொண்டது.

இந்தியாவின் உத்தரவை அடுத்து அமெரிக்காவும் டிக் டாக் செயலியை தடை செய்ய பரிசீலித்து வருவதாக கூறியது. இப்படி டிக் டாக் நிறுவனத்திற்கு ஏற்பட்டுவரும் தொடர் நெருக்கடி காரணமாக டிக் டாக் நிறுவனம் தனது தலைமை இடத்தை சீனாவில் இருந்து மாற்றி வேறொரு இடத்திற்கு மாறப்போவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் டிக் டாக் நிறுவனம் அதன் புது தலைமையகத்தை லண்டனில் திறக்க கடந்த சில மாதங்களாக இங்கிலாந்து அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதேநேரம் லண்டன் மட்டும் இல்லாமல் வேறு சில நாடுகளில் தலைமை இடத்தை அமைக்கலாமா எனவும் பரிசீலனை நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது.

டிக்டோக் செயலியானது சீனாவை தளமாகக் கொண்டு இயங்கிவரும் பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்நிறுவனம் கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் தொடர் சிக்கல்களை சந்தித்துவரும் நிலையில் இந்த இட மாற்றம் தொடர்பகா அந்நிறுவனம் அதிகம் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo