இந்தியா

லாக்டவுனில் முதல் இடத்தை பிடித்த டிக்-டாக் செயலி! சரிவை சந்தித்த பேஸ்புக்!

Summary:

Tik tok tops at lockdown downloads

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த சமயத்தில் இந்தியாவில் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்ட சமூக வலைத்தள செயலிகள் பட்டியலில் டிக் டாக் முதலிடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியாவில் டிக்-டாக் செயலியினை 1 கோடியே 6 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் இன்ஸ்டாகிராம் 71 லட்சம், ஹலோ ஆப் 66 லட்சம், பேஸ்புக் 47 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

வீட்டிலேயே முடங்கியிருக்கும் பலருக்கு பொழுதுபோக்காக டிக்-டாக் செயலி உள்ளது. மேலும் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் விதமாக பேஸ்புக் ஆப்பினை ஹலோ ஆப் பின்னுக்கு தள்ளியுள்ளது.

ஒட்டுமொத்த செயலிகள் பட்டியலில் ஆரோக்யா சேது சுமார் 2 கோடி, லூடோ கிங் விளையாட்டு செயலி 1.6 கோடி, வீடியோ கால் செயலியான ஷூம் 1.5 கோடி என பலர் டவுன்லோடு செய்துள்ளனர்.


Advertisement