இந்தியா டெக்னாலஜி

டிக்டாக்கை தடை செய்தது பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்றது..! மக்கள் பெருசா பாதிக்கப்பட போறாங்க.! எம்.பி சொன்ன பரபரப்பு காரணம்..!

Summary:

Tik Tok ban will affect people like demonetisation says nusrat jahan

சீனாவுடன் எல்லை பிரச்சனை  நிலவி வரும் நிலையில், கடந்த திங்கள்கிழமை மத்திய அரசு இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் 59 சீன செயலிகளுக்கு திடீர் தடை விதித்தது. தேசத்தின் பாதுகாப்பு கருதி, சீனாவின் 59 செயலிகளுக்கும் தடை விதிப்பதாக இந்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்துவந்தாலும், சில எதிர்ப்புகளும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் டிக் டாக் செயலி மீதான தடை குறித்து மேற்கு வங்காள திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், இது மக்களின் மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தும் முடிவு, தற்போது பலரும் வேலை இல்லாமல் உள்ளனர், இந்த திடீர் தடை பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மக்கள் சந்தித்த பாதிப்பு போன்று தற்போதும் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

தேசத்தின் பாதுகாப்பு முக்கியம் என்பதால் டிக்டாக்கை தடை செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் நான் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு யார் பதில் சொல்வார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Advertisement