இன்று இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்! வெறும் கண்களால் பார்க்க முடியுமா? எத்தனை மணிக்கு?

இன்று இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்! வெறும் கண்களால் பார்க்க முடியுமா? எத்தனை மணிக்கு?



this year first lunar eclipse


2020-ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று இரவு நிகழ்கிறது. இதனை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வெறும் கண்களால் பார்க்க முடியும். இதற்கு ஓநாய் சந்திர கிரகணம் என நாசா பெயரிட்டுள்ளது.

சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமிப்பந்து கடந்து செல்லும்போது ஏற்படும் ஒரு நிகழ்வே சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. சந்திர கிரகணத்தின் போது பூமியின் நிழல் சந்திரன் மீது படிந்திருக்கும். இன்று இரவு 10.37 மணி முதல் நள்ளிரவு 2.45 வரை நீடிக்கின்றது.

lunar

சந்திரன் -சூரியன் இடையே பூமி வரும் போது, சூரியனின் ஒளி பூமியால் மறைக்கப்படும் போது சந்திர கிரகணம் உண்டாகின்றது. கிரகணம் உச்சத்தில் இருக்கும்போது, 90 சதவீத சந்திரன் பூமியால் மறைக்கப்படும். இந்த நிகழ்வால் சந்திரனின் ஒளி மங்கும், பிற நாட்களில் காட்சியளிப்பது போல இருக்காது. 

இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் அனைத்து பகுதி மக்களும் வெறும் கண்ணால் பார்க்க முடியும். மேலும் ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களை சேர்ந்த பல்வேறு நாட்டினரும் கிரகணத்தை பார்க்கலாம் என வானியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.