இந்தியா

சிறையில் இருந்தபடியே தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்.! அவர் மக்களுக்கு என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.?

Summary:

அசாமில், சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், நேற்று முன்தினம் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக

அசாமில், சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், நேற்று முன்தினம் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், பா.ஜ., கூட்டணி, 75 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிபெற்றுள்ளது. எனினும், பா.ஜக- வை வீழ்த்தி, ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றதை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து உள்ளது.

அசாமில் குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பாளர், ஊழல் எதிர்ப்பு, தகவல் அறியும் உரிமைச்சட்ட போராளியாக அறியப்பட்டிருப்பவர் அகில் கோகோய் கடந்த 2019-ஆம் ஆண்டு தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ராய்ஜோர் தள் என்ற புதிய கட்சியின் நிறுவனரான இவர் சிறையில் இருந்தபடியே அசாம் சட்டசபை தேர்தலில் சிப்சாகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். 

இந்த சூழ்நிலையில், ஒருமுறைகூட வெளியில் வந்து பிரசாரம் செய்ய வாய்ப்பில்லாத அகில், சிறையில் இருந்தபடியே பல திறந்த கடிதங்களை தொகுதி மக்களுக்குக்கு எழுதினார். மேலும், அகிலுக்காக அவரது 85 வயதான தாய் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில், அகில் 57,219 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், தன்னை வெற்றிபெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்து சிறையிலிருந்து ஒரு கடிதத்தை எழுதி வெளியிட்டுள்ளார் அகில் கோகோய்.

அந்த கடிதத்தில், அரசாங்கத்திற்கு எதிராக நின்று என்னை ஆதரித்த அசாம் மக்களுக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை ஆதரித்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். அனைவருக்கும் இலவச தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என அகில் கோகோய் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.


Advertisement