சுரங்கம் தோண்டி வங்கிக்குள் சென்று ரூ.1 கோடி தங்க நகைகளை திருடி சென்ற கொள்ளையர்கள்..!!

சுரங்கம் தோண்டி வங்கிக்குள் சென்று ரூ.1 கோடி தங்க நகைகளை திருடி சென்ற கொள்ளையர்கள்..!!



The robbers dug a mine and entered the bank and stole gold jewelery worth Rs 1 crore

உத்திரபிரதேசத்தில், சுரங்கம் தோண்டி வங்கிக்குள் சென்று நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள பஹ்தியில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி உள்ளது. இன்று காலை வங்கி ஊழியர்கள் வழக்கம்போல வங்கியை திறந்துள்ளனர். அப்போது, சுரங்கம் தோண்டி வங்கியின் பணம், நகை பெட்டகம் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் கொள்ளையர்கள் நுழைந்துள்ளது தெரியவந்தது. வங்கியில் இருந்த 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.8 கிலோ தங்கத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாராணை மேற்கொண்டு வருகின்றனர். பஹ்தியில் இருந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு  பின்புறத்தில் உள்ள காலி நிலத்தில் இருந்து 10 அடி நீளத்திற்கு பள்ளம் தோண்டி வங்கிக்குள் நுழைந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த 1.8 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

மேலும், 32 லட்ச ரூபாய் பணம் வைத்திருந்த லாக்கரை உடைக்க முடியாததால், சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.8 கிலோ தங்கத்தை திருடி சென்றுள்ளனர். காவல்துறையினர் இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வங்கியில் கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.