நாயை குளிப்பாட்ட மறுத்த போலீஸ்காரர்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த எஸ்பி... உத்தரவை ரத்து செய்த ஐ.ஜி...!

நாயை குளிப்பாட்ட மறுத்த போலீஸ்காரர்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த எஸ்பி... உத்தரவை ரத்து செய்த ஐ.ஜி...!



The policeman who refused to bathe the dog... the SP suspended the SP... the IG canceled the order.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் காவல் துறை கட்டுப்பாட்டு பிரிவு எஸ்.பி.யாக இருப்பவர் நவநீத் சர்மா. இவரது வீட்டில் பாதுகாப்பு பணிக்கு ஆகாஷ் நியமிக்கப்பட்டார். 

சம்பவத்தன்று ஆகாஷ் பணிக்கு சென்றபோது, எஸ்.பி வீட்டில் இருந்தவர்கள் அவர்களின் வளர்ப்பு நாயை குளிப்பாட்டுமாறு கூறியுள்ளனர். இதற்கு ஆகாஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே இதுகுறித்து வீட்டில் இருந்தவர்கள் எஸ்.பி.யிடம் புகார் தெரிவித்தனர். இதை அறிந்ததும் கோபமடைந்த எஸ்.பி காவல் பணிக்கு வந்த ஆகாஷை சஸ்பெண்டு செய்யும்படி எஸ்.பி.உத்தரவிட்டார். இதற்காக போலீஸ்காரர் ஆகாஷ், எஸ்.பி.யின் வீட்டில் இருந்த மின் சாதனங்களை சேதப்படுத்தியதாக புகார் பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் போலீஸ்காரர் ஆகாஷ், இதுகுறித்து டி.ஜி.பி.யிடம் புகார் அளித்தார். அதில் தன்னை வேண்டுமென்றே சஸ்பெண்டு செய்திருப்பதாகவும் புகாரில் கூறியிருந்தார். டி.ஜி.பி. இந்த புகார் பற்றி விசாரிக்கும்படி ஐ.ஜி.க்கு உத்தரவிட்டார். அதன்பேரில் நடைபெற்ற விசாரணையில் போலீஸ்காரர் ஆகாஷ் மீது தவறு இல்லை என்பது தெரியவந்ததுள்ளது. 

இதைத்தொடர்ந்து, போலீஸ்காரர் ஆகாஷை சஸ்பெண்டு செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. பின்னர் அவர் திருவனந்தபுரம் நகர காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.