கணவரை வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி... பெண்ணை பலாத்காரம் செய்த காவல் துறை அதிகாரி..!!

கணவரை வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி... பெண்ணை பலாத்காரம் செய்த காவல் துறை அதிகாரி..!!


The police officer who raped the woman saying that she would free her husband from the case..!!

திருவனந்தபுரம், வழக்கில் சிக்கிய இளம்பெண்ணின் கணவரை விடுவிப்பதாக கூறி, பலாத்காரம் செய்த இன்ஸ்பெக்டர் கைது. 

கேரள மாநிலம், கோழிக்கோடு கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருபவர் சுனு. இந்நிலையில், கொச்சி திருக்காக்கரை பகுதியை  சேர்ந்த பெண் ஒருவர், இன்ஸ்பெக்டர் சுனு உள்பட 6 பேர் மீது திருக்காக்கரை காவல் நிலையத்தில் பலாத்கார புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த பெண்ணின் கணவர் ஒரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த வழக்கிலிருந்து பெண்ணின் கணவரை விடுவிக்க வேண்டும் என்றால் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று மிரட்டி அந்த பெண்ணை அவரது வீட்டில் மற்றும் கடவந்திரா என்ற இடத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் சுனு உள்பட 6 பேர்  பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த மே மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளது. வெளியே சொன்னால் கொன்று விடுவேன் விடுவேன் என்று சுனு மிரட்டியுள்ளார்.   

எனவே அந்த பெண் இதுவரை காவல் நிலையத்தில் புகார் செய்யாமல் இருந்தார். ஆனால் நேற்று முன்தினம் அந்த இளம்பெண் கொச்சி திருக்காக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக காவல்துறையினர் இன்ஸ்பெக்டர் சுனு உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து நேற்று திருக்காக்கரை காவல்துறையினர் கோழிக்கோடு சென்று இன்ஸ்பெக்டர் சுனுவை கைது செய்தனர். 

விசாரணைக்காக சுனுவை கொச்சிக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் கணவரின் நண்பர், கோயில் ஊழியர் ஒருவர் உள்பட மேலும் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கூட்டு பலாத்கார வழக்கில் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டது, கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.