இளம்பெண் உடலை கூறு கூறாக வெட்டிய கொடூரன்!!.. கொலையை மறைக்க போட்ட நாடகம்..!!

இளம்பெண் உடலை கூறு கூறாக வெட்டிய கொடூரன்!!.. கொலையை மறைக்க போட்ட நாடகம்..!!


The police have arrested the man who killed the woman and cut her body parts and buried them in several places

பெண்னை கொலை செய்து உடல் பாகங்களை வெட்டி பல இடங்களில் புதைத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

மத்திய காஷ்மீரின் சோய்புக் பகுதியில் வசித்து வரும் தன்வீர் அகமத் கான் என்பவர், பயிற்சி வகுப்புக்கு சென்ற அவரது 30 வயது சகோதரியை காணவில்லை என சோய்புக் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

காவல்துறையினர்  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மொகந்த்பொரா புட்காம் பகுதியை சேர்ந்த ஷபீர் அகமது வானி(45) போன்ற சிலரை சந்தேகத்தின் அடிப்படையில்  விசாரித்தனர். விசாரணையில் ஷபீர் அகமது வானி என்பவர் அந்த பெண்ணை கொலை செய்தது தெரியவந்தது. 

காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் காணாமல் போனதாக கூறப்பட்ட பெண்ணை கொலை செய்து, உடல் பாகங்களை வெட்டி பல இடங்களில் புதைத்ததை ஒப்பு கொண்டார். இதை தொடர்ந்து, பெண்ணின் உடல் பாகங்களை எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், தனது உறவினரை திருமணம் செய்த மறுத்ததால் அந்த பெண்ணை அவர் கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. பெண்னை கொலை செய்து உடல் பாகங்களை வெட்டி பல இடங்களில் புதைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.