தங்கைக்கு பாலியல் தொல்லை அளித்த அக்கா... ஆத்திரத்தில் போலீசில் புகார் அளித்த தங்கை...!The older sister sexually harassed her younger sister... The younger sister complained to the police in anger...

கணவரை பிரிந்து வாழும் இளம் பெண் தனது தங்கைக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். தங்கை காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் கணவரை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வரும், 24 வயதான இளம் பெண் தூங்கிக் கொண்டிருந்த தனது 18 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். தூக்கத்திலிருந்து விழித்த தங்கை கோவத்தில் இதுகுறித்து அக்காவிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.  

ஆனாலும் அவரது அக்கா, மறுபடியும் தன் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அவரது தங்கை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மேலும் காவல் நிலையத்திற்கு சென்று அக்கா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.