பெண்ணுக்கு உணவில் போதை மருந்து கலந்து கொடுத்து... பாலியல் பலாத்காரம் செய்த மேனேஜர்...!The manager who mixed drugs in the woman's food...raped her...

சம்பள உயர்வு தருவதாக கூறி அழைத்து, பெண்ணுக்கு உணவில் போதை மருந்து கொடுத்து நிறுவன மேனேஜர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

அரியானா மாநிலம், குருகிராமில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணை அவரது நிறுவன மேனேஜர் சம்பள உயர்வு விவகாரம் தொடர்பாக பேச வேண்டும் என்று கூறி மாலுக்கு அழத்துள்ளார்.

அந்த மாலுக்கு வெளியே இருவரும் பேசுகையில் அந்த பெண்ணிற்கு வழங்கப்பட்ட உணவில் மேனேஜர், போதை மருந்து கலந்து கொடுத்துள்ளார். மயக்கத்தில் இருந்த அந்த பெண்ணை மேலாளர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

மேலும் அந்த பெண்ணை நிர்வாண வீடியோ எடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் அவரது நிறுவன மேனேஜர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.