மதிய உணவு உண்ட 70 மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு: அதிர்ச்சி ரிப்போர்ட்..!!The incident of 70 students who ate the lunch served yesterday has caused a lot of shock.

நேற்று பரிமாறப்பட்ட மதிய உணவை சாப்பிட்ட 70 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புது டெல்லி, தென்மேற்கு டெல்லி பகுதியில் உள்ள தாப்ரி பகுதியில் இயங்கிவரும் பள்ளியில், நேற்று நண்பகல் வழக்கம் போல் உணவு பரிமாறப்பட்டது. இந்த உணவை உண்ட சுமார் 70 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடல்நிலை பாதிப்படைந்த மாணவர்களை அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்ற மாணவர்கள் 70 பேரும் தற்போது நலமுடன் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட கல்வித்துறை அதிகாரிகள், மதிய உணவு அமைப்பாளருக்கு சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.