அடக்கொடுமையே..! மண மேடையில் புதுமண பெண்ணுக்கு நிகழ்ந்த விபரீதம்... கதறும் குடும்பத்தினர்..!

அடக்கொடுமையே..! மண மேடையில் புதுமண பெண்ணுக்கு நிகழ்ந்த விபரீதம்... கதறும் குடும்பத்தினர்..!


the-disaster-happened-to-the-newlywed-girl-on-the-weddi

உத்திரபிரதேச மாநிலம் மஹிலாபாத் பாத்வானா கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்பால் ஷர்மா. இவருக்கு ஷிவாங்கி ஷர்மா என்ற மகள் உள்ளார். ஷிவாங்கிக்கு திருமண ஏற்பாடு செய்ய பெற்றோர்கள் முடிவெடுத்துள்ளனர்.

இதன் படி இரு குடும்பத்தாரும் திருமண ஏற்பாடுகளை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் திருமணத்தன்று மணமகனும், மணமகளும் மாலை மாற்றிக் கொண்ட நிலையில் ஷிவாங்கி ஷர்மாவுக்கு மணமகன் தாலி கட்டினார். பின்னர் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமகளும், மணமகனும் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

Newlywed girl died

இந்நிலையில்தான் ஷிவாங்கிக்கு திடீரென மயக்கம் வரவே அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர்கள் ஷிவாங்கியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஷிவாங்கியை அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பின் காரணமாக இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷிவாங்கியின் குடும்பத்தினர்கள் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.