இந்தியா

தாயிடமிருந்து தண்டவாளத்தில் விழுந்த குழந்தை.! மின்னல் வேகத்தில் வந்த ரயில்.! நொடிப்பொழுதில் ஹீரோவாக மாறிய நபர்.! ஷாக் வீடியோ.!

Summary:

ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை தக்க சமயத்தில் காப்பாற்றிய ரயில்வே ஊழியரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வாங்கனி ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் அவரது குழந்தையுடன் நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது தாயின் கையை பிடித்துக்கொண்டு நடைமேடையில் விளிம்பில் நடந்து சென்ற குழந்தை, திடீரென தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளது.

அந்த தண்டவாளத்தில் ரயில் வேகமாக வருவதை உணர்ந்த தாய், என் செய்வது என்று தெரியாமல் பதட்டத்தில் துடித்துள்ளார். அந்த சமயத்தில், ரயிலுக்கு எதிர் திசையிலிருந்து தண்டவாளத்தில் ஓடி வந்த மயூர் ஷெல்க் என்ற நபர் குழந்தையை தூக்கி நடைமேடை மீது தள்ளிவிட்டு, விளிம்பில் தானும் நடைமேடையில் ஏறி தப்பியுள்ளார்.

ஒரு நொடி தாமதமாக ஆகியிருந்தாலும், அவர் ரயிலில் அடிபட்டு உயிரிழக்க நேர்ந்திருக்கும். அவர் நடைமேடையில் எரிய அடுத்த நொடியில் ரயில் மின்னல் வேகத்தில் அவர்களை கடந்துச்செல்கிறது. தன் உயிரை பணயம் வைத்து குழந்தையை காப்பாற்றிய மயூர் ஷெல்க்கை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.  

அங்கு நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், தன் உயிரை பணயம் வைத்து குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்க்-ன் செயலை கண்டு மிகவும் பெருமைப்படுவதாக பாராட்டியுள்ளார்.


Advertisement