சுற்றுலாவுக்கு சென்ற போது விபரீதம்; காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய கார்கள்: பரபரப்பான நொடிகள்..!

சுற்றுலாவுக்கு சென்ற போது விபரீதம்; காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய கார்கள்: பரபரப்பான நொடிகள்..!



The cars were caught in the wild flood when they went on a trip

மத்திய பிரதேசம், இந்தூர் மாவட்டத்தை சேர்ந்த 50 பேர் கார்கோன் மாவட்டத்தில் உள்ள மலை மற்றும் வனப்பகுதிகளுக்கு சுற்றுலா 14 கார்களில் சுற்றுலா சென்றுள்ளனர். இந்த நிலையில் அந்த இடத்தில் பெய்த கன மழையால் ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. அதில் அப்பகுதியில் இருந்த 14 கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது. அவர்கள் சுற்றுலாவுக்கு சென்ற கத்கூத் வனப்பகுதியில் உள்ள சுக்தி ஆற்றில் நேற்று பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட 14 கார்களும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  மீட்பு படையினர், பொதுமக்களின் உதவியுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 10 கார்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள கார்களை மீட்கும் பணி நடைபெறுவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கார்கள் வெள்ளத்தால் இழுத்து செல்லப்பட்ட போது அதில் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.