மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
பெங்களூரில் சதித்திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்... சிறையில் தாக்குதல்... காவல்துறையினர் புலன் விசாரணை.!
பெங்களூருவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவதற்கு திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட ஐந்து தீவிரவாதிகளில் நசீர் என்பவர் மீது பெங்களூரு மத்திய சிறையில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறி என்ஐஏ அதிகாரிகள் சையத் சோஹைல் (24), உமர் (29), ஜுனைத் (30), முதாஷிர் (28), ஜாஹித் (25) ஆகிய ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களிடமிருந்து மூன்று மடிக்கணினிகள் 7 துப்பாக்கிகள் 5 வாக்கிடாக்கிகள், 45 தோட்டாக்கள் கத்தி மற்றும் வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பொருட்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இவர்கள் அனைவரும் பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த தீவிரவாதிகளில் முக்கியமானவரான நசீர் என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விட்டு அழைத்து வந்தபோது சிறை வளாகத்தில் இருந்த மது மற்றும் மஞ்சு ஆகிய இரண்டு கைதிகளும் தாக்கி இருக்கின்றனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த நசீருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.