பயங்கர தீ... ஓடும் பேருந்து தீப்பற்றி எரிந்த விபத்தில் 26 பேர் உடல் கருகி பலி.!



terrible-in-maharashtra-26-people-were-burnt-to-death-i

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் நாடெங்கிலும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் யவத்மாலில் இருந்து புனே நோக்கி 33 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு நேரத்தில்   புல்தானாவில் உள்ள சம்ருதி மகாமேரி  நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்தில் தீப்பிடித்தது. பின்னர் அந்த தீ பேருந்து முழுவதும் பரவியது. இதனால் பயணிகள் உடனடியாக பேருந்தில் இருந்து வெளியேற முடியவில்லை.

India

இதனால் பேருந்திலிருந்த 26 பயணிகள் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் சம்பவம் அறிந்து அருகில் இருந்த கிராம மக்கள் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பேருந்தில் இருந்த ஏழு பேரை காப்பாற்றி அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தக் கொடூர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உடல்கள் முழுவதும் எரிந்து கருகி உள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் வழங்கப்படும் என மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். விபத்தில் பலியானவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.