"பாய் ஃபிரன்டுக்காக சண்டை..." 15 வயது மாணவிக்கு கத்தி குத்து.!! +2 மாணவிகள் அராஜகம்.!!



tenth-standard-student-attacked-by-plus-two-girls-due-t

டெல்லியில் உள்ள அமன் விஹார் பகுதியிலுள்ள பள்ளியில் பயிலும் 15 வயது மாணவி தனது வகுப்பு தோழியால் கத்தியால் (பேப்பர் கட்டர்) தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் ‌9 அன்று பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய மாணவியை, அவரது வகுப்புத் தோழி மற்றும் 12ம் வகுப்பு  மாணவிகள் சேர்ந்து தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் மாணவியின் முகத்திலும், இடுப்பிலும் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அவருக்கு 50 தையல்கள் போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து விசாரிக்கையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கும் தாக்குதல் ‌நடத்திய மாணவிக்கும் இடையே ஆண் நண்பருடனான பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் முன்பகையாகும்.

India

சம்பவம் நடந்து 2 நாட்களுக்கு பிறகு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், போலீசாரின் செயல்பாடு குறித்து குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். முதலில் புகாரை தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் வழக்கு பதிவு செய்ய தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் இளம் வயதிலேயே பெண்களிடையே இத்தகைய வன்முறை மனநிலை வளர்ந்து வருவதுதான்.

இதையும் படிங்க: "என் ஆளு மேலயே கைய வைப்பியா.." காதலியின் தந்தை மீது தாக்குதல்.!! ரவுடி உட்பட இருவர் கைது.!!