முதலமைச்சருக்கு 2 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து கோயில் கட்டிய எம்.எல்.ஏ.!

முதலமைச்சருக்கு 2 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து கோயில் கட்டிய எம்.எல்.ஏ.!


temple-for-chief-minister

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு, ஆளும் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் கோவில் கட்டியுள்ளார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காளஹஸ்தியை சேர்ந்த ஆளும் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காளஹஸ்தி எம்.எல்.ஏ. மதுசூதன் ரெட்டி அப்பகுதியில் உள்ள ஜெகண்ணா காலனி அருகில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு 2 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து கோவில் கட்டி உள்ளார்.

ஆந்திர மாநில வரலாற்றில் முதல் முறையாக முதலமைச்சர்  ஒருவருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.  இங்கு தொகுதி மக்கள் தங்களின் பிரச்னைகள் குறித்த மனுக்களை அளிக்க ஒரு உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் இருக்கும் பணியாளா்கள் மக்கள் பிரச்னைகளுக்கு தீா்வு கிடைக்க வழிசெய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இங்கு ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் நவரத்ன திட்டம் குறித்த படங்கள் வைக்கபட்டு உள்ளன. ஆந்திர முதல்வரின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களும் வைக்கப்பட்டுஉள்ளன. இந்தநிலையில் இந்த ஜெகண்ணா நவரத்னா கோவில் நேற்று முன்தினம் திறக்கப்பட்டுள்ளது.