ஆசையோடு காத்திருந்த மணமக்கள்!! கடைசி நேரத்தில் காத்திருந்த அதிர்ச்சி!! திருமண வீட்டாருக்கு கைகொடுத்த டெக்னாலஜி..!

ஆசையோடு காத்திருந்த மணமக்கள்!! கடைசி நேரத்தில் காத்திருந்த அதிர்ச்சி!! திருமண வீட்டாருக்கு கைகொடுத்த டெக்னாலஜி..!


Telungana groom tie knot to bride with video call

கொரோனா அச்சம் காரணம் புரோகிதர் திருமணத்திற்கு வர மறுத்து, கடைசியில் வீடியோ காலில் மந்திரம் ஓதி திருமணம் செய்துவைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

கொரோனா அச்சம் காரணமாக பல இடங்களில் திருமண ஏற்பாடுகள் தள்ளிவைக்கப்படும், பல இடங்களில் மிக எளிமையான முறையிலும் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் தெலுங்கான மாநிலம் மெதக் மாவட்டத்தில் உள்ள சோமாலி கிராமத்தைச் சேர்ந்த சிவராம் என்பவரது மகள் மஞ்சுளாவுக்கும், பீமலா கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று அதன்படி திருமண தேதியும் வந்துள்ளது.

கொரோனா அச்சம் ஒருபுறம் இருந்தாலும் தேதி குறித்தபடி மணமக்கள் இருவருக்கும் பீமலா பகுதியில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தாலி கட்டும் நேரமும் வந்தது. ஆனால் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புரோகிதர் மட்டும் வரவில்லை. காரணம் அந்த பகுதியில் சமீபத்தில் இளைஞர் ஒருவர் கொரோனாவால் மரணமடைந்தால், கொரோனா அச்சம் காரணமாக புரோகிதர் திருமணத்திற்கு வரவில்லை.

இதனால் முகூர்த்த நேரத்தில் புரோகிதர் இல்லாமல் என்ன செய்வது என திண்டாடிய அவர்கள், பின்னர் வீடியோ கால் மூலம் அதே புரோகிதரை அழைத்து, அவர் வீடியோ காலில் மந்திரம் சொல்ல, மணமகன் மணமகளுக்கு தாலி கட்டினார். காசு வாங்கிய புரோகிதர் கைவிட்டாலும், கடைசியில் டெக்னாலஜி இவர்களுக்கு கைகொடுத்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.