நிலத்தகராறில் விவசாயி கண்மூடித்தனமாக அடித்துக்கொலை; நெஞ்சை ரணமாக்கும் காணொளி..!Telangana Narayanpet Farmer Killed by Gang 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நாராயணப்பேட்டை மாவட்டம், உட்குரு மண்டலா, சின்ன பெர்லா கிராமத்தில் வசித்து வருபவர் சஞ்சீவ். இவர் ஹைதராபாத்தில் வேலை பார்த்து வருகிறார். சொந்த ஊரில் சமீப காலமாகவே அவர் விவசாயம் செய்து வருகிறார். 

குடும்பத்திற்குள் நிலத்தகராறு

இவர் விவசாயம் செய்யும் 4 ஏக்கர் நிலத்தில், அவரின் சகோதரருக்கும் பங்கு உண்டு என்பதால் சஞ்சீவ் - அவரின் சகோதரர் இடையே கடந்த 2 ஆண்டுகளாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. சஞ்சீவ் நிலத்தகராறு குறித்து காவல் நிலையத்தை அணுகியபோது, அவர்கள் நீதிமன்றம் செல்ல அறிவுறுத்தி இருக்கின்றனர்.

கடுமையான தாக்குதல்

இதனிடையே, இன்று தனது நிலத்தில் சஞ்சீவ் விதைகள் விதைக்க முயற்சித்தபோது, அங்கு வந்த சகோதரர் மற்றும் அவரின் குடும்பத்தினர் வாக்குவாதம் செய்துள்ளனர். ஒருகட்டத்தில் 5 பேராக சேர்ந்து சஞ்சீவை கடுமையாக தாக்கி இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட சஞ்சீவ் நிகழ்விடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். 

இதையும் படிங்க: ஊழலை எதிர்த்ததால் கார் ஏற்றி கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்; உ.பி-யில் பயங்கரம்.!

அதிகாரிகளின் தாமதத்தால் பறிபோன உயிர்

கிராமத்தினர் குடும்பத்தினருக்கு இடையே நடந்த சண்டையை தடுக்க முயன்ற போதும் பலனில்லை. காவல் துறையினருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தும், 2 மணிநேரமாக அதிகாரிகள் வராத காரணத்தால் சோகம் நிகழ்ந்துள்ளது. இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: அண்ணியை கரம்பிடித்த கொழுந்தன்; ஆத்திரத்தில் சொந்த தம்பியை போட்டுத்தள்ளிய பாசக்கார சகோதரர்கள்.!