பெண்களின் வாட்ஸப்புக்கு ஆபாச படங்கள் அனுப்பி தொல்லை தந்த இளைஞர்; வெளுத்தெடுத்த உறவினர்கள்.!Telangana Hyderabad Man Arrest Police When Sent Obscene Pics 

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத், சுரம் காவல் எலைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் சிக்கந்தர் நானி (வயது 26). இவர் அப்பகுதியில் செயல்பட்டு வரும் சுகாதார மையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். 

சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக வரும் சிறுமிகள் மற்றும் பெண்களை குறிவைத்து, அவர்களிடம் நட்பாக பேசி செல்போன் நம்பரை பெற்று, அவர்களுடன் பேசி வந்துள்ளார். 

சில பெண்களுக்கு வாட்சப்பில் ஆபாச படங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி பாலியல் ரீதியான தொல்லை தந்துள்ளார். சமீபத்தில் சிக்கந்தரால் பாதிக்கப்பட்ட பெண்மணி தனது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சிக்கந்தரை பிடித்து வெளுத்து எடுத்துள்ளார். 

பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிப்பட்டுள்ளது. நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பெண்ணிடம் புகாரை பெற்று சிக்கந்தரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். அவரின் உடலில் லேசான காயமும் ஏற்பட்டதால், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார்.