டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விபத்தில் மரணம்.. அப்பளமாக கார் நொறுங்கியதில் பரிதாபம்.!

டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விபத்தில் மரணம்.. அப்பளமாக கார் நொறுங்கியதில் பரிதாபம்.!


TATA Company Former President Died an Accident

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் இருந்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாலகர் மாவட்டம் சரோட்டி ஆற்றுப்பாலத்தில் டாடா சான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி தனது காரில் வந்துகொண்டு இருந்தார். 

அப்போது, அவரின் சொகுசு கார் எதிர்பாராத விதமாக தனது கட்டுப்பாட்டினை இழந்து சாலைத்தடுப்பில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காரின் முன்புறம் அப்பளம் போல நொறுங்கிவிடவே, விபத்தில் கார் ஓட்டுநர் உட்பட 2 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், சைரஸ் மிஸ்திரி (வயது 54) நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சைரஸ் மிஸ்திரியின் மறைவுக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.