தாஜ்மஹால் சிவன் கோவில் நிலத்தில் கட்டப்பட்டதா?.. கிளம்பியது அடுத்த சர்ச்சை.. நீதிமன்றத்தில் மனுதாக்கல்.!

தாஜ்மஹால் சிவன் கோவில் நிலத்தில் கட்டப்பட்டதா?.. கிளம்பியது அடுத்த சர்ச்சை.. நீதிமன்றத்தில் மனுதாக்கல்.!



tajmahal-land-ownership-appeal-in-agra-court

 

இந்தியாவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்று என கேட்டால், பலரும் தாஜ்மஹால் சென்று கூறுவார்கள். முகலாயர்களின் ஆட்சி இந்தியாவில் நடக்கும்போது, மன்னர் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜுக்காக ஆக்ரா நதிக்கரையோரம், 1628–1658 ஆண்டில் தாஜ்மஹாலை கட்டினார். இன்று தாஜ்மஹால் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. 

இந்நிலையில், யோகேஷ்வர் ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மஸ்தான் சேவா சங்க அறக்கட்டளை மற்றும் சக்திபீட விகாஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் தாஜ்மஹால் அமைந்துள்ளது என நீதிமன்றத்தில் உரிமைகோரல் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அந்த மனுவில், "தாஜ்மஹால் அமைந்துள்ள இடம், தேஜோமஹாலயா கோயில் இருந்த இடம் ஆகும். இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை இன்று அதனை கட்டுக்குள் வைத்திருக்கிறது. தாஜ்மஹாலின் வயது என்பது இன்று வரை தொல்லியல் ஆய்வாளர்களால் கணக்கிடப்படவில்லை. தேஜோமஹாலயா சிதைக்கப்பட்டு தாஜ்மஹாலாக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடத்தப்பட்டுள்ளது. 

tajmahal

இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், மாநில சுற்றுலாத்துறை மற்றும் தொல்லியல் துறை ஆய்வாளர்கள், இதுகுறித்து பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு இருக்கிறது. 

சமஸ்கிருதத்தில் தேஜோமஹாலயா என்ற வார்த்தையை இரண்டாக பிரித்தால் அது சிவன் கோவில் என்ற பொருள் தோன்றுகிறது. தேஜோ என்றால் சிவசஹஸ்த்திரத்தில் இருக்கும் போலேநாத் எனவும், மஹாலயா என்றால் சமஸ்கிருதத்தில் கோவில் என்றும் பொருள்படும். இதனால் அங்கு இருந்த சிவன் கோவிலே, பின்னாளில் தாஜ்மஹால் ஆகியுள்ளது எனவும் புகார்தாரரின் மனுவில் தெரிவிக்கப்ட்டுள்ளது.