தமிழகம் இந்தியா

கலைஞருக்கு மெரினாவில் இடம் வாங்கி தந்த அவசர வழக்கு சட்டம் தடைசெய்ய படுகிறதா?

Summary:

Supreme court says no more emergency cases

சில வழக்குகளை பதிவு செய்து அதனை அவசர வழக்காக ஏற்று கொண்டு அதை உடனே விசாரித்து தீர்ப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை ஐகோர்ட் முதல் சுப்ரீம் கோர்ட் வரை அடிக்கடி பதிவாகி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு மறைந்த முன்னாள் திமுக தலைவர் கலைஞர் அவர்களுக்கு கூட மெரினாவில் இடம் மறுக்கப்பட்டதை அவசர வழக்காக பதிவு செய்துதான் அன்று இரவே தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ஒருசில வழிமுறைகள் வகுக்கப்படும் வரை, அவசர வழக்கு விசாரணை கிடையாது என இன்று சுப்ரீம் கோர்ட் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

தூக்கு தண்டனை, நாட்டை விட்டு வெளியேற்றுதல் போன்ற வழக்குகளை மட்டுமே அவசர வழக்காக கருதப்படும் என புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளது அனைவரையும் பதற்றமடைய வைத்துள்ளது.  இதனால் சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் இன்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Advertisement