பெண்கள் கழிவறையிலிருந்து வெளியே வந்த பேராசிரியர்! சந்தேகமடைந்து உள்ளே சென்ற மாணவிக்கு ஏற்ப்பட்ட அதிர்ச்சி!

பெண்கள் கழிவறையிலிருந்து வெளியே வந்த பேராசிரியர்! சந்தேகமடைந்து உள்ளே சென்ற மாணவிக்கு ஏற்ப்பட்ட அதிர்ச்சி!


Subham iit

சென்னையில் உள்ள ஐஐடியில் பேராசிரியர் ஒருவர் பெண்கள் கழிவறைக்கு சென்று அங்கு தனது செல்போனை மறைத்து வீடியோ எடுக்க முயன்றுள்ளார். ஆனால் அதனை ஒரு மாணவி பார்த்ததால் அந்த பேராசிரியரை போலீசார் கைது செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னையில் உள்ள ஐஐடியில் விண்வெளி பொறியியல் துறை ஆய்வுக்கூடத்தில் உள்ள பெண்கள் கழிவறைக்கு ஆராய்ச்சி மாணவி ஒருவர் சென்ற போது அந்த கழிவறையிலிருந்து அதே துறையை சேர்ந்த உதவிபேராசிரியர் சுபம் பானர்ஜி என்பவர் மாணவியின் எதிரே கழிவறையிலிருந்து வந்துள்ளார்.

iit

இதனால் சந்தேகமடைந்த அந்த மாணவி உள்ளே சென்று சுற்றும் முற்றும் பார்த்துள்ளார். அப்போது தண்ணீர் குழாய்களுக்கு இடையே இருந்த ஓட்டையில் செல்போன் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனே நிறுவனத்திடம் புகார் கொடுத்து அவர்கள் வந்து பார்த்த போது சுபம் ஆண்கள் கழிவறையில் இருந்துள்ளார். மேலும் அவரிடம் விசாரணை செய்த போது அந்த செல்போன் தன்னுடையது தான் என்று ஒப்பு கொண்டுள்ளார்.

அதனை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சுபத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு மாணவர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.