பள்ளி மாணவனை அரை நிர்வாணமாக்கி தலையில் அம்பேத்கர் படத்துடன் ஊர்வலம்.. வைரல் வீடியோ!

பள்ளி மாணவனை அரை நிர்வாணமாக்கி தலையில் அம்பேத்கர் படத்துடன் ஊர்வலம்.. வைரல் வீடியோ!



Student ambedkar photo rally viral video

கர்நாடகா மாநிலத்தில் பள்ளி மாணவனை அரை நிர்வாணமாக்கி தலையில் அம்பேத்கர் படத்துடன் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே மிக மோசமான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சாதி மோதல்கள் குறித்த சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது பெரும் கவலை அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுரகி நகரில் பள்ளி மாணவர் விடுதி ஒன்றிய இயங்கி வருகிறது. இந்த விடுதியில் நேற்று முன்தினம் குடியரசு தினத்தன்று அம்பேத்கர் உருவ படத்தை வைத்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாணவர் ஒருவர் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள் அந்த மாணவரை தாக்கி, அரை நிர்வாணமாக்கியுள்ளனர். மேலும் அந்த மாணவரின் தலையில் அம்பேத்கர் உருவப்படத்தை வைத்து, ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.

Ambedkar photo rally

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிய நிலையில், கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாதிக்கப்பட்ட மாணவனை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.