இந்தியா

டெல்லியில் பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்ட விமானம்.! வைரல் வீடியோ.!

Summary:

டெல்லியில் பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்ட விமானம்.! வைரல் வீடியோ.!


விமானம் ஒன்று தரைவழியே கொண்டுசெல்லும்போது பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லி விமான நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் பயன்படுத்தப்படாத பழைய விமானம் ஒன்றை பெரிய கனரக வாகனத்தில் கொண்டு சென்றுள்ளனர். அப்போது டெல்லி-குருகிராம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு நடைபாதை மேம்பாலத்தை கடக்கும்போது பாலத்தின் மேற்பகுதியில் உரசி சிக்கிக்கொண்டது. 

ஒரு நீண்ட ட்ரக்கின் மீது அந்த விமானத்தை வைத்து கொண்டு செல்லும்போது, விமானத்தின் மூக்கு மற்றும் அதன் நடுப்பகுதியின் பாதி பகுதி பாலத்தை கடந்து சென்றது, ஆனால் விமானத்தின் நடுப்பகுதி உயரமாக இருந்ததால் பாலத்தின் கீழ் சிக்கி உரசியபடி நின்றது. 

இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து அந்த விமானம் நிறுவனத்தால் அழிக்கப்பட்டு விற்கப்பட்டது என்ற தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement