13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
தாயின் சடலத்தை தோளில் சுமந்தபடி 5 கி.மீ நடந்துசென்ற மகன்!! நெஞ்சை உலுக்கும் சம்பவம்..
ஆம்புலன்சிற்கு கொடுக்க பணம் இல்லாததால் தாயின் சடலத்தை அவரது மகன் நடந்தே தூக்கிச்சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநில பகுதியில் உள்ள ஜல்பைகுரியில் வசித்து வருபவர் ராம் பிரசாத் என்ற கூலித்தொழிலாளி. ராம் பிரசாத்தின் தாய்க்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவரது மகன் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராம் பிரசாத்தின் தாய் மருத்துவமனையிலையே உயிரிழந்தார்.
பின்னர் தாயின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ராம் பிரசாத் அங்கிருந்த ஆம்புலன்ஷ் ஓட்டுனர்களை அணுகியுள்ளார். ஆனால் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் வழக்கத்தை விட கூடுதல் பணம் கேட்டனர்.
அவர்கள் கேட்ட பணத்தை ராம் பிரசாத்தால் கொடுக்க முடியவில்லை. எனவே அவரது தந்தையின் உதவியுடன் தாயின் உடலை 5 கிலோமீட்டர் தூரம் வீட்டிற்கு நடந்தே எடுத்துச் சென்றுள்ளனர்.
தாயின் சடலத்துடன் ராம் பிரசாத் சாலையில் நடந்துசென்ற காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பரப்பப்பட்டதால், சம்பந்தப்பட்ட மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகமும், மருத்துவமனை கண்காணிப்பாளரும் தெரிவித்துள்ளனர்.