
Social media
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு போன்ற மொழிகளில் தேசவிரோத கருத்துக்களை பரப்புவதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வாட்ஸ் அப், ட்விட்டர், டிக்டாக் போன்ற சமூக வலைத்தள செயலின் மீது ஹைதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள நம்பல்லி நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் சில்வேரி ஸ்ரீசைலம் என்பவர் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு சில சட்ட விரோத செயல்களை வாட்ஸ் அப், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பரப்புவதாக மனுத்தாக்கல் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சிஏஏ, என்ஆர்சி போன்றவற்றிற்கு எதிராக பாகிஸ்தான் அரசு சில சமூகவிரோத சக்திகள் கருத்துக்களை பதிவிட்டதாகவும் அதனை இந்திய வலைத்தளத்தில் பரப்புவதாகவும் கூறி மனுதாக்கல் செய்துள்ளனர். எனவே அடுத்த சில நாட்களில் சமூகவலைத்தளங்களின் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement