தமிழகம் இந்தியா வீடியோ

ஐயோ! அனகோண்டா பாம்பா ? அச்சத்தில் உறைந்துபோய் கிடக்கும் கிராமங்கள்! பீதியை கிளப்பும் வீடியோ!

Summary:

snake found in vellore district

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அமைந்துள்ளது மோர்தானா அணை.இது   தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலத்தின் எல்லை பகுதிகளில் அமைந்துள்ளது. மேலும் இதனை சுற்றி ஆந்திர மாநிலத்தின் புங்கனூர், பலமனேர், நாயக்கனேரி ஆகிய காடுகள் அமைந்துள்ளது.

இந்நிலையில் தமிழகம் மற்றும்ஆந்திராவில் மழை அதிகளவில் மழை பெய்து வருவதால்  மோர்தானா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் அணைக்கு பின் பகுதியில் உள்ள பள்ளத்தில் நீரில் ராட்சத மலைப் பாம்பு ஒன்று ஏதோ விலங்கு ஒன்றினை விழுங்கி கொண்டு அசைய முடியாமல் கிடந்துள்ளது. அதனை அங்கு ஆடு மேய்த்து கொண்டிருந்த சில இளைஞர்கள்  வீடியோ எடுத்துள்ளனர். மேலும் இதனை அனகோண்டா எனவும் கூறிவந்துள்ளனர் .

         

அதனை தொடர்ந்து இந்த  வீடியோ  சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் உள்ள பாம்பு அனகோண்டா வகையை சேர்ந்தது இல்லை. அது பெரிய அளவிலான ராட்சச மலைப்பாம்பு. எனவே மலையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ளவர்கள் ஆடு, மாடு கோழிகள் போன்றவற்றை கண்காணித்துக் கொள்ளுங்கள். மேலும் காட்டு பகுதிகளுக்கு யாரும் தனியாக  செல்ல வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement