வைரல் வீடியோ: 3 அடி நீள நாக பாம்பை விழுங்கிய 4 அடி நீள நாகம்!! வைரலாகும் வீடியோ காட்சி இதோ..



Snake eats another snake in Odisha viral video

ஒடிசாவில் 3 அடி நீள பாம்பை 4 அடி நீள பாம்பு ஒன்று விழுங்கியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஒடிசாவின் குர்டா மாவட்டத்தில் பாலகதி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியில் சென்றுகொண்டிருந்த 3 அடி நீள பாம்பை 4 அடி நீள பாம்பு ஒன்று விழுங்கியுள்ளது. இந்த இரண்டு பாம்புகளும் நாக பாம்புகள். இந்த சம்பவம் குறித்து அறிந்து, அங்கு வந்த வனத்துறையினர் 3 அடி நீள பாம்பை 4 அடி நீள பாம்பிடம் இருந்து மீட்டு வன பகுதியில் விட்டனர்.

பாம்புகளை பொறுத்தவரை ராஜநாகம் போன்ற பெரிய பாம்புகள் சிரியவகை பாம்புகளை சாப்பிட்டு உயிர்வாழ்வது வழக்கம். ஆனால் எல்லா வகையான பாம்புகளும் பிற பாம்புகளை சாப்பிடுவது இல்லை. இந்நிலையில் நாக பாம்பு ஒன்று மற்றொரு நாக பாம்பை விழுங்கியுள்ளது ஆச்சரியமாக இருப்பதாக வனத்துறையினர் தெரிய்வித்துள்ளார்.  இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.