பயமுறுத்தும் வீடியோ காட்சி.. ராஜநாகத்தை பிடிக்கும் போது நூலிழையில் உயிர் தப்பிய நபர்.. நடுங்கவைக்கும் காட்சிகள்..

பயமுறுத்தும் வீடியோ காட்சி.. ராஜநாகத்தை பிடிக்கும் போது நூலிழையில் உயிர் தப்பிய நபர்.. நடுங்கவைக்கும் காட்சிகள்..


Snake catcher escaped from king copra viral video

ராஜநாகத்தை பிடிக்கும் முயற்சியில் பாம்பு பிடிப்பவரை ராஜநாகம் கொத்த முயற்சிப்பதும், அதில் இருந்து பலமுறை பாம்பு பிடிப்பவர் தப்பிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகிவருகிறது.

பாம்பு இனங்களில் மிகவும் கொடிய விஷம் கொண்ட ஒன்று ராஜநாகம். பாம்புகளை உணவாக உட்கொள்ளும் இந்தவகை கொடிய பாம்புகள் பொதுவாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிகம் வசிப்பது இல்லை. ஆனால் உணவை தேடி வரும்போது பல நேரங்களில் மக்கள் வசிக்கும் இடங்களுக்கும் வருவது வழக்கம்.

அந்த வகையில் கர்நாடக மாநிலம் சிவ்மோகா என்ற வனப்பகுதியில் மரம் ஒன்றின் அடியில் ராஜநாகம் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அந்த பாம்பை பிடிப்பதற்காக பாம்பு பிடி வீரர் ஒருவர் அங்கு வரவழைக்கப்பட்டார். பாம்பை பிடிப்பவர் பலகட்ட முயற்சிகளுக்கு பிறகு அந்த பாம்பை கம்பியில் மாட்டி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அவரது உதவியாளர் பாம்பின் வாலைப்பிடித்து பாம்பை தூக்க முயன்றபோது பாம்பு சீறிக்கொண்டு பாம்பு பிடிப்பவரை கொத்த முயல்கிறது. பாம்பு திடீரென சீறுவதை எதிர்பார்க்காத அவர் பாம்பிடம் இருந்து தப்பிக்க முயல்கிறார். இதனிடையே பாம்பு மீண்டும் மீண்டும் அவரை கொத்த முயற்ச்சி செய்கிறது.

ஒருகட்டத்தில் பாம்பை பிடித்து அவர் தள்ளிவிடுகிறார். அப்படி இருந்தும் அந்த பாம்பு அவரை கொத்த முயல்கிறது. கடைசியில் பாம்பை பிடிப்பவர் அந்த பாம்பை கழுத்து பிடியாக பிடித்து உயிர் தப்பியுள்ளார். இந்த பரபரப்பு காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.