அசந்து உறங்கிய முதியவரின் சட்டைக்குள் புகுந்த பாம்பு- வைரலாகும் வீடியோ!

அசந்து உறங்கிய முதியவரின் சட்டைக்குள் புகுந்த பாம்பு- வைரலாகும் வீடியோ!



Snack in old man short

மகாராஷ்டிராவின் அகமது நகரின் உள்ள ஒரு மருத்துவமனையில் முதியவர் ஒருவர் அசந்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கே தெரியாமல் அவரது சட்டைக்குள் புகுந்த பாம்பு அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனை வளாகத்தின் முன்பாக முதியவர் ஒருவர் உறங்கிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது பச்சை நிற பாம்பு ஒன்று அவர் சட்டைக்குள் ஏரி உள்ளது.

உடனே மருத்துவமனை ஊழியர்கள் ,பொதுமக்கள் ஆகியோர் இதனை பார்த்துள்ளனர். உடனே வனத்துறை ஆய்வுக்கூடத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மீட்புக் குழு உடனடியாக வந்து முதியவரின் சட்டையில் உள்ள பாம்பை அகற்றியுள்ளது. மீட்புக் குழு உறுப்பினர் பாம்பை மீட்டு காட்டுப் பகுதியில் விட்டு செல்லும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.