வாவ்.. இந்த ட்விஸ்டை எதிர்பார்க்கலையே! ஐஸ்கிரீம் கடைக்காரரை அசரவைத்த குட்டி தேவதை! வைரலாகும் கியூட் வீடியோ!!Small girl dance video viral

ஐஸ்கிரீம் கடையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் குட்டி சிறுமி ஒருவர் செய்த காரியம் அனைவரையும் ரசிக்க வைத்து ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
அழகிய குட்டி சிறுமி ஒருவர் ஐஸ்கிரீம் வாங்க சென்றுள்ளார். அங்கு எப்பொழுதும் கடைக்காரர் ஐஸ்கிரீம் வழங்குவதற்கு முன்பு ஏமாற்றுவது போல சில பாவனைகள் செய்வது வழக்கம். 

அவ்வாறு அந்த ஐஸ்கிரீம் கடைக்காரர் சிறுமியிடமும் ஐஸ்கிரீமை கொடுக்காமல் விளையாட்டு காட்டியுள்ளார். ஆனால் அந்த குழந்தை அதனை கவனிக்காமல் கடையில் பின்னணியில் ஒலித்த பாடலுக்கு ஏற்றவாறு அழகாக நடனமாடியுள்ளார். அதனைக் கண்டு கடைக்காரர் ஆச்சர்யம் அடைந்துள்ளார்.

மேலும் அவர் கடையை விட்டு வெளியேறி குழந்தை நடனமாடுவதை ரசித்து பார்த்து, அதனுடன் நடனமாடி முத்தமிட்டு மகிழ்ந்துள்ளார். குட்டி தேவதையின் இந்த அசத்தலான வீடியோவை அவினேஷ் சரண் என்பவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டநிலையில் அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது. பலரும் இதனை கண்டு ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.