ரூ.9 கோடி இழப்பீடு வேண்டும்.. நடிகர் ரவி மோகன் தொடர்ந்த வழக்கு.! ஏன்? என்ன நடந்தது?
எனக்கு கல்யாணம் செய்யணும்.! தாயிடம் கதறும் குட்டி பையன்.! பலரையும் ரசிக்க வைத்த கியூட் வீடியோ!!

கேரளாவைச் சேர்ந்த குட்டி சிறுவன் ஒருவன் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தனது தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கியூட்டான வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.
குழந்தைகள் என்றாலே பிடிக்காதவர்கள் எவரும் இலர். அதிலும் அவர்கள் செய்யும் குறும்புகள், சேட்டைகள் அனைவரையும் மெய்மறந்து ரசிக்க செய்யும். சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஏராளமான குழந்தைகள் தங்களது சின்னஞ்சிறு அழகிய சேட்டைகளால் அனைவரையும் கவர்ந்து பெருமளவில் வைரலாகி வருகின்றன.
அத்தகைய குறும்புகளை பார்க்கும்போது மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் தானாக நீங்கிவிடும். அவ்வாறு தற்போது கேரளாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அழகிய குட்டி பையன் ஒருவன் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவரது அம்மாவிடம் கியூட்டான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.