குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்.. தேர்வறையில் மாணவி மாரடைப்பால் இறந்த சோகம்..!Shocking incident in Gujarat..Sad student died of heart attack in examination room..!

குஜராத் மாநிலத்தில் தொடர்ச்சியாக இளம் வயதில் மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருக்கிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் குஜராத்தில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தின் போது கர்பா நடனமாடிய 10 பேர் ஒரே நாளில் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதில் இறந்த 10 பேரும் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 இதனை தொடர்ந்து ராஜ்கோட் பகுதியை சேர்ந்த சாக்ஷி ரஜோசரா என்ற மாணவி பள்ளி வகுப்பறைக்குள் மயங்கி விழுந்துள்ளார். இதனால் நினைவிழந்த மாணவியை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவி சாக்ஷி ரஜோசராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

gujarat

இந்நிலையில் இறப்பிற்கான காரணத்தை கண்டறிய மாணவி சாக்ஷி ரஜோசரா உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மாணவி மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 9-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.