10 வருடம் மூக்குவலியால் துடித்த இளம்பெண்...! ஸ்கேனைப் பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்..!
10 வருடம் மூக்குவலியால் துடித்த இளம்பெண்...! ஸ்கேனைப் பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்..!

மருத்துவத்துறையில் சில நேரங்களில் விசித்திரமான சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவரின் மூக்கில் இருந்து சட்டை பட்டன் ஒன்றை மருத்துவர்கள் நீக்கியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில் கேரள இளம்பெண் ஒருவர் கடந்த பத்து ஆண்டுகளாக மூக்குவலியால் தவித்து வந்துள்ளார். 22 வயதாகும் அந்த பெண்ணுக்கு சில நாட்களில் திருமணம் இருக்க திடீரென அவருக்கு மூக்குவலி தீவிரம் அடைந்தது.
இதனால் மருத்துவனையில் சேர்க்கப்பட்ட நிலையில் மருத்துவர்கள் மூக்கு பகுதியை ஸ்கேன் செய்து பார்த்ததில் மூக்கில் ஏதோ வித்தியாசமான ஓன்று இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதனை அடுத்து அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு சிகிச்சையும் நடந்தது.
அறுவை சிகிச்சையின் பொது மூக்கில் சட்டை பட்டன் ஒன்று இருந்ததும், ஒரு பக்க மூக்கு துவாரத்தில் அடைபட்டிருந்த அந்த பட்டனை சுற்றி மெல்ல சதை வளர்ந்து முழுக்க மூடியிருந்ததும் தெரியவந்தது.
மேலும் மூக்கின் இன்னொரு பகுதி மட்டுமே மூச்சுவிட பயன்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து மூக்கில் இருந்த பட்டன் நீக்கப்பட்டு இப்போது அந்த பெண் நலமாக இருக்கிறார். இருந்தும் மூக்குக்குள் பட்டன் போனது எப்படி என அனைவரும் குழப்பத்தில் உள்ளனராம்.