இந்தியா சினிமா

காட்டுத்தீயை அணைக்க நண்பர்களுடன் போராடிய பிரபல வில்லன் நடிகர்! வைரலாகும் வீடியோ

Summary:

Shayaji shinde fights to control fire at pune

புனே காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயினை நடிகர் சாயாஜி ஷிண்டே தனது நண்பர்களுடன் சேர்ந்து அணைக்க போர்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

மராத்தி திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகரான சாயாஜி ஷிண்டே தமிழிலும் பிரபல நடிகர்களுடன் வில்லனாக நடித்துள்ளார். இவர் மேலும் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

சாயாஜி ஷிண்டே நேற்று புனேயில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மாலை 4 மணியளவில் மும்பைக்கு திரும்பிள்ளார். அவரது கார் மும்பை-புனே நெடுஞ்சாலையில் கோத்ரஜ் அருகே வந்துகொண்டிருந்த போது சாலையோர வனப்பகுதியில் புதர்கள் மற்றும் புற்கள் பற்றி எரிவதை கண்டுள்ளார்.

உடனே தனது நண்பர்களுடன் சென்று மரக்கிளைகளை ஒடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் தீயின் வேகம் அதிகமாகவே உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதனையடுத்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்துள்ளனர்.Advertisement