90'ஸ் கிட்ஸுக்கு சூப்பர் அப்டேட்.. அப்பாஸ் மீண்டும் என்ட்ரி.. எந்த படத்தில் தெரியுமா.?!
கழிவறையில் வைத்து 4வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம்.. 40 வயது நபர் கைது!

மும்பையில் தனியார் பள்ளியின் கழிவறையில் வைத்து 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 40 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மேற்கு புறநகர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று ஏங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 4 வயது சிறுமியை கழிவறையில் வைத்து 40 வயதான பியூன் பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் இந்த விஷயத்தை வெளியே சொல்ல கூடாது என்றும், இதனை மீறி சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், குற்றவாளி என பியூன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது குழந்தைகள் பாதுகாத்தல் சட்டத்தின் பிரிவு மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.