இந்தியா உலகம் மருத்துவம்

பிரதமர் மோடி சொன்னதை செய்துகாட்டிய இஸ்ரேல் மக்கள்! நாளை நாமும் செய்வோம்!

Summary:

say thanks to doctors


சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி, உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்நோய் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்தநிலையில், வரும் ஞாயிறன்று மாலை 5 மணிக்கு வீட்டிற்குள் இருந்தபடியோ அல்லது முற்றத்தில் நின்ற‌படி கைதட்டி கொரோனாவை ஒழிக்கப் பாடுபடும் அனைவருக்கும் மக்கள் தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்று இந்தியப்‌ பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். 

கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்களுக்கு இந்தியர்கள் கைதட்டி தங்கள் ஆதரவை தெரிவிக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், பிரதமர் மோடி கூறியது போலவே இஸ்ரேல் மற்றும் துருக்கி நாட்டு மக்கள் செய்திருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

எனவே கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்களுக்கு இந்தியர்கள் அனைவரும் கைதட்டி நமது ஆதரவை தெரிவிப்போம்.


Advertisement