தமிழகம்

ஊரெல்லாம் பரவிவந்த தகவல்! திட்டம் தீட்டி, வயதான மருத்துவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! பரபரப்பு சம்பவம்!!

Summary:

மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே லோனாவ்லாவில் அமைந்துள்ள பிரதான் பூங்காவில் குழந்தை மருத்துவரா

மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே லோனாவ்லாவில் அமைந்துள்ள பிரதான் பூங்காவில் குழந்தை மருத்துவராக இருந்து வருபவர் ஹீராலால் கண்டேல்வால். 73 வயது நிறைந்த இவர் தனது  மனைவியோடு வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரது வீட்டில் ஏராளமான பணம் மற்றும் நகைகள் இருப்பதாக ஊர் முழுவதும் தகவல்கள் பரவி வந்துள்ளது. 

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் வசித்து வந்த கொள்ளையர்கள் 
அந்த வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். அதனை தொடர்ந்து கொள்ளையர்கள் சுமார் 15 பேர் கடந்த வாரம் அந்த மருத்துவரின் வீட்டினுள் நுழைந்து அந்த வயதான தம்பதிகளின் கை கால்களை கட்டி போட்டு, அவர்களை மிரட்டி பீரோ சாவியை வாங்கி அந்த வீட்டிலிருந்து 67 லட்சம் மதிப்புள்ள நகை பணத்தோடு தப்பிச்சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டநிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 பின்னர் தீவிர தேடுதலுக்கு பிறகு இந்த கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட இரு சிறுவர்கள் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ 30.52 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement